Friday 3 December, 2010

திருப்பதி வெங்கடாசலபதி

வணக்கம் நண்பர்களே

உங்கள கஷ்டங்கள் தீர ஒரு வழி உண்டு.

திருப்தி தேவஸ்தானம் பல நன்கொடை முறைகளை கொண்டுள்ளது அன்னதானம், பிராண தானம், வன விருத்தி, மருத்துவம், கல்வி கொடை மற்றும் பல.

தங்களது தேவை உடல் நலம் என்றால் அவர்களது பிராண தானம் முகவரிக்கு உங்களால் முடிந்த பணம் நன்கொடையாக அனுப்புங்கள்.

உங்கள் வீட்டு பிரச்சனையாக இருந்தால் அந்த நன்கொடைக்கு பணம் அனுப்புங்கள்.

உங்களது தேவை பணமாக இருந்தால் ஸ்ரீவாரி உண்டியலுக்கு பணம் அனுப்புங்கள்.

இது தவிர உங்களால் முடிந்த உதவிகளை வேங்கடசலபதியை மனதில் நினைத்து செய்யுங்கள்.

எல்லாம் நலமாக முடியும்.

முயற்சி செய்து பாருங்கள்.

Friday 25 June, 2010

தக்கோலம் சிவன் கோவில்

தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள அரக்கோணம் நகருக்கு அருகில் உள்ளது தக்கோலம் எனும் ஊர். இங்கு மிக பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி மிகவும் மகிமை வாய்ந்தவர். இவர் தனது தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி உள்ளார். இதன் தாத்பர்யம் இவர் நமது கோரிக்கைகளை தலை சாய்த்து கேட்பது போல வடிவமைகப்படுள்ளது. மற்ற கோவில்களில் நாம் இவரது சந்நிதியில் நின்று கொண்டே வணங்குவோம் அனால் தக்கோலத்தில் உள்ள இக்கோவிலில் இவரது சந்நிதியில் உட்கார்ந்த நிலையில் தான் நமது கோரிக்கைகளை இவரிடம் சமர்பிக்க வேண்டும்.

என்னை பொறுத்த வரை இவரை நான் வேண்டியது அனைத்தும் மிக நன்றாக நடந்துள்ளது. நீங்களும் ஒருமுறை சென்று உங்களது கோரிக்கைகளை இவரிடம் சொல்லுங்களேன். உங்களுக்கும் இவர் அருளால் நல்லது நடக்கட்டும்.

Wednesday 2 December, 2009

விநாயகருக்கு முதல் வணக்கம்


நமது இந்து கலாச்சாரப்படி நமது முதல் வணக்கம் விநாயகருக்கு செய்ய வேண்டும்.
விநாயகர் தான் முழுமுதற் கடவுள்.
நமது நாட்டில் எண்ணற்ற விநாயகர் வடிவங்கள் உள்ளது . விநாயகருக்கு என்று பல கோவில்களும் உள்ளது. திருச்சி மலை கோட்டையில் உள்ள விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தமான ஒன்றாகும்.